Home இலங்கை நண்பர்களுடன் குளத்தில் நீராடிய இளைஞன் மூழ்கி பலி! இரத்தினபுரியில் சோகம்

நண்பர்களுடன் குளத்தில் நீராடிய இளைஞன் மூழ்கி பலி! இரத்தினபுரியில் சோகம்

0
image

இரத்தினபுரி, எஹலியகொட பகுதியில் அமைந்துள்ள கல் பொத்தஹேன குளத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மீகஹவத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மேலும் நான்கு நண்பர்களுடன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/young-man-drowns-while-swimming-in-a-pond-with-friends-sorrow-in-rathinapuram-1787467903

NO COMMENTS

Exit mobile version