Home இலங்கை நாட்டில் டெங்கு நோயாளிகள் 87 ஆயிரத்தை நெருங்கினர்; 62 உயிரிழப்புகள் பதிவு

நாட்டில் டெங்கு நோயாளிகள் 87 ஆயிரத்தை நெருங்கினர்; 62 உயிரிழப்புகள் பதிவு

0
image

நாட்டில் இந்த ஆண்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 87 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று (03) நிலவரப்படி நாட்டில் மொத்தமாக 86,947 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை 1,598 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாகப் பார்க்கையில், கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், மொத்த நோயாளிகளில் 21.24 சதவீதம் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 17,187 டெங்கு நோயாளிகளும், கண்டி மாவட்டத்தில் 6,082 டெங்கு நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை டெங்கு காரணமாக 62 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், மரண விகிதம் 0.07 சதவீதமாக இருப்பதாகவும் அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/dengue-cases-in-the-country-have-approached-87000-62-deaths-reported-1785831356

NO COMMENTS

Exit mobile version