Home இலங்கை நாட்டில் வேகமெடுக்கும் டெங்கு: 92,011 நோயாளர்கள், 68 உயிரிழப்புகள் பதிவு

நாட்டில் வேகமெடுக்கும் டெங்கு: 92,011 நோயாளர்கள், 68 உயிரிழப்புகள் பதிவு

0
image

இந்த ஆண்டு இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 92,011 ஆக அதிகரித்துள்ளது.டெங்கு காரணமாக பதிவாகியுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 68 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவலின்படி,தற்போது நாடளாவிய ரீதியில் 96 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிக அபாயம் கொண்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52.96 சதவீதமான 48,725 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். இதனால் நாட்டில் டெங்கு அதிகளவில் பரவும் மாகாணமாக மேல் மாகாணம் காணப்படுகிறது.

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 3,700 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மாதாந்த அடிப்படையில் இந்த ஆண்டில் அதிகபட்சமாக ஜூலை மாதத்தில் 29,968 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஜூன் மாதத்தில் 21,533 பேரும், மே மாதத்தில் 8,590 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, ஆகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 6,671 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களை அழித்து, தமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால் தாமதமின்றி தகுதிவாய்ந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்

 

Source: https://samugammedia.com/dengue-spreading-fast-in-the-country-92011-patients-68-deaths-reported-1786878133

NO COMMENTS

Exit mobile version