நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பை பொலிஸார் பலப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று நாமல் ராஜபக்ஷ தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதையடுத்து, நீதிமன்ற வளாகத்தை அண்மித்த பகுதிகளில் மேலதிக பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த பின்னர் கடந்த 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ரக வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் விவகாரம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (CID) அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
