Home இலங்கை நாளை முதல் விலை குறையும் 18 உணவுப் பொருட்கள் – மக்களுக்கு நிவாரணம்

நாளை முதல் விலை குறையும் 18 உணவுப் பொருட்கள் – மக்களுக்கு நிவாரணம்

0
image

லங்கா சதொச நிறுவனம் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

 

இதற்கமைய, நாளை (10) முதல் இந்த புதிய விலை திருத்தங்கள் அமலுக்கு வரும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெரிய வெங்காயம், வெள்ளைச் சீனி, பருப்பு, தட்டைப்பயறு, கடலை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கோதுமை மா, சிவப்பு பச்சரிசி, சிவப்பு நாட்டரிசி, சம்பா அரிசி, வெள்ளை நாட்டரிசி, பொன்னி சம்பா உள்ளிட்ட 18 வகையான பொருட்கள் இந்த விலைக்குறைப்புப் பட்டியலில் அடங்குவதாக அமைச்சு கூறியுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட பொருட்களின் புதிய விலைகள் கொழும்பு பேட்டை (Pettah) மொத்த சந்தையில் நிலவும் விலைகளை விடக் குறைவாக இருக்கும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் இப்பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலம்   அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Source: https://samugammedia.com/18-food-items-whose-prices-will-decrease-from-tomorrow–relief-for-the-people-1781016987

NO COMMENTS

Exit mobile version