Home இலங்கை நாவலப்பிட்டியில் வீட்டின் மீது மரம் விழுந்து விபத்து – நால்வர் காயம்

நாவலப்பிட்டியில் வீட்டின் மீது மரம் விழுந்து விபத்து – நால்வர் காயம்

0
image

நாவலப்பிட்டி பகுதியில் இன்று (12) அதிகாலை வீசிய கனமழை மற்றும் பலத்த காற்றால், மேல் இம்புல்பிட்டிய பகுதியிலுள்ள வீடு ஒன்றின் மீது பெரிய மரம் விழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்தில் காயமடைந்தவர்களை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். 

மேலும், பலத்த காற்றால் மரங்கள் முறிந்து வீடுகளுக்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக வாகன விபத்துகளின் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் – போடைஸ் – டயகம பிரதான வீதியில் கடுமையான பனிமூட்டத்துடனான வானிலை நிலவுவதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு அக்கரப்பத்தனை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று இரவு கொழும்பில் இருந்து அக்கரப்பத்தனை நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று ஹட்டன் – போடைஸ் – டயகம வீதியில் கட்டுப்பாட்டை இழந்து, நடுவீதியில் சுழன்று விபத்துக்குள்ளானது. எனினும், குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Source: https://samugammedia.com/accident-in-navalpittai-as-a-tree-falls-on-a-house—four-people-injured-1781271794

NO COMMENTS

Exit mobile version