Home இலங்கை நீதிபதிகளின் சம்பளத்தில் வரி அறவிடலாம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

நீதிபதிகளின் சம்பளத்தில் வரி அறவிடலாம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

0
image

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து முன்பண தனிநபர் வருமான வரியான (APIT) வரியை அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு எதிராக மேல் நீதிமன்ற நீதியரசர்கள் சங்கம், மாவட்ட நீதிபதிகள், நீதிவான்கள் மற்றும் மேலதிக நீதிவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீதித்துறை உத்தியோகத்தர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அத்துடன், தொழிலாளர் தீர்ப்பாயத் தலைவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கமும் குறித்த வரி அறவீட்டு நடைமுறைக்கு எதிராக மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்ட நிலையில், அவற்றை நிராகரித்த நீதிமன்றம், உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து APIT வரியை அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது எனத் தீர்ப்பளித்துள்ளது.

Source: https://samugammedia.com/taxes-can-be-deducted-from-judges-salaries—high-court-ruling-1789640252

NO COMMENTS

Exit mobile version