Home இலங்கை நீரில் மூழ்கி டச்சு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு! நிலாவெளி கடற்கரையில் சோகம்

நீரில் மூழ்கி டச்சு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு! நிலாவெளி கடற்கரையில் சோகம்

0
image

திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த டச்சு நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி கடற்கரையில் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.

கடலில் நீச்சலில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் நிலாவெளி பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/dutch-tourist-drowns-in-water-sadness-at-nilaveli-beach-1785126431

NO COMMENTS

Exit mobile version