Home இலங்கை நெல்லுக்கு நியாய விலை கோரி கிளிநொச்சி விவசாயிகள் வீதியில் கொந்தளிப்பு!

நெல்லுக்கு நியாய விலை கோரி கிளிநொச்சி விவசாயிகள் வீதியில் கொந்தளிப்பு!

0
image

நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி விவசாயிகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு பேரணி

நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி விவசாயிகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி நகர் சித்திவிநாயகர் ஆலய முன்றலிருந்து, மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டு தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரனிடம், ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர், விவசாய அமைச்சர்  உள்ளிட்டோருக்கு  கையளித்திருந்தனர்.

தற்போது அரசாங்கமானது ஒரு கிலோ நெல்லை 120 ரூபா கொள்வனவு செய்கின்றது. இது உற்பத்தி செலவுக்கு போதுமானதாக இல்லை எனவும் 135 ரூபாவுக்கு அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Source: https://samugammedia.com/kilinochchi-farmers-protest-on-the-street-demanding-a-fair-price-for-paddy-1781591328

NO COMMENTS

Exit mobile version