Home விளையாட்டு சிறிலங்கா கிரிக்கெட் அணிக்கு மற்றுமொரு பின்னடைவு

சிறிலங்கா கிரிக்கெட் அணிக்கு மற்றுமொரு பின்னடைவு

0

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க(wanindu hasaranga) விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை இன்று (03) இரவு அறிவித்தது.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில், வனிந்து தனது 10வது ஓவரை வீசும்போது இடது காலில் காயம் ஏற்பட்டது.

இதன் விளைவாக, எம்.ஆர்.ஐ.  சோதனையில் இது  உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹசரங்காவிற்கு பதிலாக ஜெஃப்ரி வான்டர்சே

ஹசரங்காவிற்கு பதிலாக ஜெஃப்ரி வான்டர்சே(Geoffrey Vandersay) அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஏற்கனவே ஐந்து வேகபந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறியதால் இலங்கை கிரிக்கெட் அணி பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/wanindu-hasaranga-will-miss-1722712227

NO COMMENTS

Exit mobile version