Home விளையாட்டு உலக தடகள ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கைக்கு தங்கம்

உலக தடகள ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கைக்கு தங்கம்

0

இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் பதிரகே, தனது சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தி, Budapest 26 உலக தடகள Ultimate Championship போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற போட்டியில், மூன்றாவது சுற்றில் 87.11 மீற்றர் தூரம் எறிந்து முன்னிலை பெற்ற ருமேஷ் பதிரகே, இறுதிச் சுற்றில் தனது சிறந்த முயற்சியாக 91.09 மீற்றர் தூரத்தை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.

இரண்டு முறை உலக சம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.18 மீற்றர் தூரத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

அதிரடியான முன்னேற்றம்

ஐரோப்பிய சம்பியனான ஜூலியன் வெபர், முதல் சுற்றில் முன்னிலை வகித்திருந்த போதிலும், 85.89 மீற்றர் தூரத்துடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இதன் மூலம் ருமேஷ் பதிரகே தனது அதிரடியான முன்னேற்றம் நிறைந்த பருவத்தை உலகத் தரத்திலான வெற்றியுடன் நிறைவு செய்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/gold-for-sri-lanka-in-the-javelin-throw-final-1789345827

NO COMMENTS

Exit mobile version