Home இலங்கை பஞ்சரதத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் – மாவிட்டபுரத்தில் திரண்ட பக்தர்கள்

பஞ்சரதத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் – மாவிட்டபுரத்தில் திரண்ட பக்தர்கள்

0
image

யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாவான இரதோற்சவம் இன்று (11) வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது, முருகப்பெருமானுக்கு மூலஸ்தான பூஜை வழிபாடுகள் மற்றும் வசந்த மண்டப பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து, முருகப்பெருமான் பஞ்சரதத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இத்திருவிழாவை காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், புலம்பெயர் தேசங்களில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை தரிசித்தனர்.

மேலும், பக்தர்கள் காவடிகள், அங்கப்பிரதிஷ்டைகள் மற்றும் கற்பூரச் சட்டிகளை எடுத்துவந்து தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய இரதோற்சவத்தை முன்னிட்டு ஆலய வளாகம் மற்றும் வீதிகளில் பக்தர்களின் வருகையால் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.

Source: https://samugammedia.com/lord-murugan-who-blessed-in-the-pancharatha—devotees-gathered-in-mavitapuram-1786429777

NO COMMENTS

Exit mobile version