Home இலங்கை பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது

0
image

மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரணாயக்க தொகுதி அமைப்பாளரும் முன்னாள் அரணாயக்க பிரதேச சபை உறுப்பினருமான ஒருவர் மாவனல்லை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (07) மாலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவனல்லை, கணேதென்ன, ஹிங்குல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவி ஒருவர் மாவனல்லை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, சந்தேகநபர் ஹெம்மாத்தகம – மாவனல்லை வீதியின் தேவனகல பகுதியில் உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவ மையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

மாணவியின் கிரக தோஷம் மற்றும் தீய சக்திகளை நீக்குவதற்காக பரிகார பூஜை நடத்துவதாக கூறி, அவருக்கு பாலியல் தொல்லை வழங்கப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி மாவனல்லை பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்லை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்

Source: https://samugammedia.com/student-misuses-in-the-name-of-remedy-worship-politician-arrested-1780905833

NO COMMENTS

Exit mobile version