Home இலங்கை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தோற்சவம்

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தோற்சவம்

0
image

இராம பிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான புடைசூழ இன்று நடைபெற்றது.

தீர்த்தம்,மூர்த்தி,தலம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 03ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவந்தது.

நேற்றைய தினம் ஆலயத்தின் தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்றிருந்தது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சிவ சுகுமார குருக்கள் தலைமையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று தம்ப பூஜை நடைபெற்று,திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரர் எருது வாகனத்தில் எழுந்தருளி மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கரையினை நோக்கி ஊர்வலமாக சென்றார்.

அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தீர்த்தோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இராமபிரான் தனது தந்தையின் மரணத்திற்காக பிதிர்க்கடன் செலுத்தியதாக கருதப்படும் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் ஆயிரக்கணக்கானோர் இன்றைய தினம் தமது பெற்றோருக்கு பிதிர்க்கடன்களை செலுத்தியதையும் காணமுடிந்தது.

Source: https://samugammedia.com/mamangeswarar-temple-theerthotsavam-with-the-participation-of-thousands-of-devotees-1786524667

NO COMMENTS

Exit mobile version