Home இலங்கை அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் மெழுகுதிரி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம்

அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் மெழுகுதிரி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம்

0
image

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி, திருகோணமலையில் இன்று (25) மாலை கவனயீர்ப்பு போராட்டமும் ஊர்வலமும் இடம்பெற்றது.

திருகோணமலை இறையிறக்க தேவாலயத்தின் முன்னால் நடைபெற்ற இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மெழுகுதிரிகளை ஏந்தியவாறு அனோஜனுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாகச் சென்ற போராட்டக்காரர்கள், தங்களது கோரிக்கையை வலியுறுத்தியவாறு பயணித்தனர்.

ஊர்வலம் மொட்டைப்புலி வைரவர் ஆலயத்தை சென்றடைந்ததையடுத்து, அங்கு இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டிருந்தது. மெழுகுதிரி ஏந்தி அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள், தங்களது கோரிக்கையை உரிய தரப்பினரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் செயற்பட்டனர்.

Source: https://samugammedia.com/candlelight-protest-in-trincomalee-seeking-forgiveness-for-anojan-1790414971

NO COMMENTS

Exit mobile version