Home இலங்கை குற்றம் கந்தானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கந்தானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

0

 கந்தானையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கார் ஒன்றில் பயணம் செய்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த காரில் பயணம் செய்த மற்றுமொருவர் காயமடைந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சை பலனின்றி மரணம்

இந்தத் துப்பாக்கிச் சூடு, கந்தானை பொது சந்தை அருகே இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் உடனடியாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

   

Source: https://tamilwin.com/article/kandana-shooting-one-killed-1751522246

NO COMMENTS

Exit mobile version