Home இலங்கை பஸ் சாரதியை வாளால் தாக்க முயன்ற பெண் உட்பட மூவர்! திவுலப்பிட்டியவில் பரபரப்பு

பஸ் சாரதியை வாளால் தாக்க முயன்ற பெண் உட்பட மூவர்! திவுலப்பிட்டியவில் பரபரப்பு

0
image

திவுலப்பிட்டிய நகரில் தனியார் பஸ் சாரதியை வாளால் தாக்க முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உட்பட மூவரை  விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த  11ஆம் திகதி  திவுலப்பிட்டிய நகரில் பஸ் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தபோது, அதன் பின்னால் வந்த கார் ஒன்று திடீரென பஸ்ஸை மறித்துள்ளது.

இதனையடுத்து காரில் இருந்து இறங்கிய பெண் ஒருவரும் இரு ஆண்களும் கைகளில் வாள்களுடன் பஸ் சாரதியை நோக்கிச் சென்று, அவரைத் தாக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவர் தனது கைப்பேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளதுடன், குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.

காணொளிக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்த திவுலப்பிட்டிய பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவரையும் 13ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவையின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், காரின் சாரதிக்கு எதிராக மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/three-people-including-a-woman-who-tried-to-attack-the-bus-driver-with-a-sword-sensation-in-divulapitiya-1786856738

NO COMMENTS

Exit mobile version