Home இலங்கை பாடகி சசிதரன் வர்ஜாவை கௌரவிக்கும் நிகழ்வு!

பாடகி சசிதரன் வர்ஜாவை கௌரவிக்கும் நிகழ்வு!

0
image

இந்தியாவின் Zee tamil தொலைக் காட்சியின் பாடல் போட்டியில் இறுதி 5 போட்டியாளர்களில் ஒருவராக தேர்வான சசிதரன் வர்ஜாவை கௌரவிக்கும் நிகழ்வு அவரது சொந்த ஊரிலுள்ள அவர் கல்வி கற்கும் திருகோணமலை, வெருகல் – இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரியின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை (18) இடம்பெற்றது.

இதன் போது Zee Tamil தொலைக்காட்சி பாடகி சசிதரன் வர்ஜா வெருகல் – கல்லடி மலை நீலியம்மன் பாடசாலை முன்றலில் இருந்து வாகனப் பேரணியாக இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டார்.

இதன்போது வீதியின் இருபக்கங்களிலும் பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் நின்று பட்டாசு கொழுத்தி கைகுழுக்கி,மாலை அணிவித்து அவரை வரவேற்றனர்.

இதன்போது ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

இதன் பின்னர் பாடசாலைக்கு வருகை தந்த வர்ஜாவுக்கு மாணவர்களினால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.இதன்போது வர்ஜா பொன்னாடை போர்த்தி,நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்து வர்ஜாவினை வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.     

Source: https://samugammedia.com/an-event-honoring-singer-sasitharan-varja-1781777484

NO COMMENTS

Exit mobile version