Home இலங்கை பாதயாத்திரை நாயை உதைத்து துன்புறுத்திய இளைஞர் அதிரடிக் கைது

பாதயாத்திரை நாயை உதைத்து துன்புறுத்திய இளைஞர் அதிரடிக் கைது

0
image

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் பயணித்த நாயை உதைத்து துன்புறுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளதாகவும், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரதம பரிசோதகருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் 21 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான நாய், யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள பக்தர்களுடன் சுமார் 450 கிலோமீற்றர் தூரம் பயணித்து வந்த “சுப்பிரமணியன்” என்ற பெயருடைய நாய் என அறியப்படுகிறது.

கல்முனை பகுதியில் இந்த நாய் தாக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி, பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்து அமைப்புகளும் இந்தச் செயலை மனிதாபிமானமற்றதாகக் கண்டித்துள்ளன.

இதனிடையே, கைது செய்யப்படுவதற்கு முன்னர் சந்தேக நபர் தனது சமூக ஊடகப் பக்கத்தில், குறித்த நாயை துன்புறுத்தியமை தொடர்பாக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/young-man-who-harassed-a-pilgrimage-dog-has-been-arrested-suddenly-1782624281

NO COMMENTS

Exit mobile version