எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் பாடத்திட்டம் மற்றும் பரீட்சை முறை உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கல்வி சீர்திருத்த திட்டங்களில் நேர்மறையான மாற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்விச் சீர்திருத்தங்கள்
அத்தோடு, தற்போதுள்ள கல்வி முறை மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக மாற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கல்வியில் போட்டித்தன்மையைக் குறைக்கும் நோக்கில் 2026 முதல் கல்விச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், தேர்வு முறை மற்றும் பாடத்திட்டத்தை திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.