Home இலங்கை கல்வி சூறாவளியின் எதிரொலி! பெருந்தொகை மக்களின் வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்து

சூறாவளியின் எதிரொலி! பெருந்தொகை மக்களின் வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்து

0

இலங்கையை தாக்கிய திட்வா (Ditwah) சூறாவளியால் தொழில்துறை மற்றும் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்ட ஆரம்பகட்ட மதிப்பீட்டு அறிக்கை தெரிவிக்கிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 17 இலட்சம் மக்கள் வசிப்பதுடன், இது நாட்டின் மொத்த மக்கள்தொகையின் 7.5 சதவீதமாகும்.

விவசாயம், தொழில் மற்றும் சேவை துறைகளைச் சேர்ந்த சுமார் 3.74 இலட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 2.44 இலட்சம் ஆண்களும் 1.30 இலட்சம் பெண்களும் அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறு-நடுத்தர தொழில்களுக்கு ஆதரவு

துறைவாரியாக 85,000 விவசாய வேலைகள், 1.25 இலட்சம் தொழிற்துறை வேலைகள் மற்றும் 1.64 இலட்சம் சேவைத் துறை வேலைகள் ஆபத்தில் உள்ளன.

மாதாந்த வருமான இழப்பு 48 மில்லியன் அமெரிக்க டொலரை எட்டக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்த ஊதியம் பெறும் மற்றும் ஒழுங்கற்ற துறையிலுள்ள தொழிலாளர்கள் மிகுந்த அபாயத்தில் உள்ளனர்.

மேலும், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 16 சதவீதம் (16 பில்லியன் அமெரிக்க டொலர்) பாதிக்கப்படக்கூடும் என ஐஎல்ஒ எச்சரித்து, அவசர பண உதவி, வேலைவாய்ப்பு திட்டங்கள் மற்றும் சிறு-நடுத்தர தொழில்களுக்கு ஆதரவு வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version