முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமியொருவர் உயிரிழந்துள்ளமை மருத்துவமனையின் தவறு என்றும் சிறுமி உயிரிழப்பிற்கு
சரியான நீதிவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு சிலாவத்தையில் கடந்த 20.12.2025 அன்று உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட
மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட 12 அகவை சிறுமி ஒருவர் 21.12.2025 அன்று உயிரிழந்துள்ளார்.
நீதியான விசாரணை
எனவே, இந்த சிறுமி உயிரிழப்புக்கு நீதியான விசாரணை தீர்வு வழங்கப்படவேண்டும் என
சிலாவத்தை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இறந்த சிறுமிக்கு ஒரு நீதியான தீர்வு கிடைக்கவேண்டும் வைத்தியசாலைக்கு
அனுமதிக்கப்படும் பிள்ளைகளுக்கு இதேமாதிரி எதிர்காலத்தில் நடக்கக்கூடாது.
போரில் அடிபட்டு இறந்துவிட்ட நிலையில் இப்போது ஒவ்வொரு உயிராக
வளர்த்துக்கொண்டிருக்கின்றோம். கவனயீனத்தினால் பிள்ளைகள்
செத்துக்கொண்டிருப்பார்களானால் இதனை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம்.
சிறுமியின் இறுதி நிகழ்வுகள்
இதற்கான தீர்வினை மருத்துவமனை அதிகாரிகள் தரவேண்டும் தவறும் பட்சத்தில்
சிலாவத்தை மக்கள் யார் என்பதை இந்த அரசாங்கத்திற்கு காட்டிக்கொள்வோம் என்றும்
அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் குறித்த சிறுமியின் இறுதி நிகழ்வுகள் (24) இன்று சிலாவத்தை
பகுதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
பெருமளவான மக்கள்,பாடசாலை மாணவர்கள் கண்ணீர்மல்க சிறுமியின் உடல்
வீதிவழியாக பாடசாலைமாணவிகள் மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் காவிச்சென்று
சிலாவத்தை தமிழ்வித்தியாலயம் மாணவி கல்விகற்ற பாடசாலைக்கு முன்பாக நின்று
அஞ்சலி செய்தபின்னர் உடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
