Home இலங்கை சமூகம் பதுளை சார்ணியா தமிழ் மகா வித்தியாலயத்தை சென்றடைந்த உறவுப்பாலம் நிவாரணப்பணி

பதுளை சார்ணியா தமிழ் மகா வித்தியாலயத்தை சென்றடைந்த உறவுப்பாலம் நிவாரணப்பணி

0

டிட்வா சூறாவளியால் பாதிப்புக்குள்ளாகி இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மலையக உறவுகளுக்கான ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் நிவாரணப்பணி தற்போது பதுளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பெரும் ஆபத்துக்கள் உள்ள பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டு காணப்படும் பிரதேச மக்களும், மண்சரிவு போன்ற அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளாகிய மக்களும் மலையகத்தின் பெரும்பாலான இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் ஐ.பி.சி தமிழின் நிவாரணப் பணி இன்றையதினம் பதுளை சார்ணியா தமிழ் மகா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது.

குடியிருப்புக்களை இழந்த மக்கள்

தமது குடியிருப்புக்களை இழந்த மக்கள் தற்போது பதுளை சார்ணியா தமிழ் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப்பொருட்கள், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் நிவாரணப்பணி குழுவினரால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version