Home இலங்கை பிரபல தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது – விசாரணையில் அதிர்ச்சி

பிரபல தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது – விசாரணையில் அதிர்ச்சி

0
image

ஹொரணை நகரில் இயங்கி வரும் பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை, நர்த்தனகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடம் இருந்து 15 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கையடக்கத் தொலைபேசி மற்றும் சிம் அட்டை, அத்துடன் இலத்திரனியல் தராசு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நர்த்தனகல பகுதியில் உள்ள சந்தேகநபரின் வீட்டிற்குச் சென்ற போது, அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹொரணை பகுதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் எனவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த சந்தேகநபர் மீது இதற்கு முன்னரும் போதைப்பொருள் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபரைத் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Source: https://samugammedia.com/p-famous-private-tuition-center-owner-arrested-with-drugs—shock-in-investigation-1785136910

NO COMMENTS

Exit mobile version