Home இலங்கை புதுமணத் தம்பதியின் வினோத திருமண ஊர்வலம்!

புதுமணத் தம்பதியின் வினோத திருமண ஊர்வலம்!

0
image

ஆடம்பர கார்கள் மற்றும் சொகுசு வாகனங்களில் திருமண ஊர்வலங்கள் நடத்துவது தற்போது வழக்கமாகி வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு வித்தியாசமான திருமண ஊர்வலம் சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பூக்களால் அழகாக அலங்கரிக்கப்பட்ட  லாண்ட் மாஸ்ரில் புதுமணத் தம்பதிகள் ஊர்வலமாக வந்த சம்பவம், இணையத்தில் வேகமாகப் பரவி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

மணமகன் தானே உழவு இயந்திரத்தை ஓட்டியபடி, அருகில் மணமகளுடன் மகிழ்ச்சியாக திருமண ஊர்வலத்தில் பங்கேற்றார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த உழவு இயந்திரத்தைச் சுற்றி உறவினர்களும் நண்பர்களும் உற்சாகமாக கலந்து கொண்ட காட்சிகள், திருமணத்திற்கு மேலும் சிறப்பூட்டியுள்ளன.

திருமணங்களில் அதிகரித்து வரும் ஆடம்பரச் செலவுகளுக்கு மாறாக, எளிமை, பாரம்பரியத்தை  வெளிப்படுத்தும் வகையில் இந்தத் திருமண ஊர்வலம் அமைந்திருந்ததாக சமூக வலைத்தள பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆடம்பரத்தை விட பாரம்பரியம் மற்றும் எளிமைக்கு முன்னுரிமை அளித்த இந்த திருமண ஊர்வலம், யாழ்ப்பாணத்தின் தனித்துவமான கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.

Source: https://samugammedia.com/the-newlyweds-bizarre-wedding-procession-1782987880

NO COMMENTS

Exit mobile version