உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (31) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பூட்டானுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
நாளை பூட்டானில் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.
இதன்போது “நெருக்கடிகளை எதிர்கொள்ள விழிப்புணர்வோடு எழுச்சி பெறுதல்” என்ற தலைப்பில் பிரதமர் ஹரினி அமரசூரிய முதன்மை உரையாற்றவுள்ளார்.
மேலும், தனது பூட்டான் பயணத்தின்போது சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ள பிரதமர், நிலையான உணவு முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பங்களிப்பு உள்ளிட்ட விடயங்களில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Source: https://samugammedia.com/puttan-traveled-prime-minister-harini-amarasuriya-1788154015
