Home இலங்கை பெந்தோட்டை கடலில் விபரீதம்; கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய இளைஞன் சடலமாக மீட்பு

பெந்தோட்டை கடலில் விபரீதம்; கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய இளைஞன் சடலமாக மீட்பு

0
image

இந்தியாவின் பெங்களூரிலிருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐந்து இந்திய இளைஞர்களில் ஒருவர், பெந்தோட்டை கடலில் நீராடியபோது கடல் அலையில் அள்ளுண்டு காணாமல்போன நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பெங்களூரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 24 வயதுடைய இந்திய இளைஞர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காலி – பெந்தோட்டை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்றுக்கு அருகில் குறித்த இளைஞர் கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, கடல் அலையில் அள்ளுண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விடுதி நிர்வாகத்தினரால் பெந்தோட்டை பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது, கடலில் காணாமல்போன இளைஞனின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/tragedy-in-the-sea-at-penthodai-indian-youth-who-worked-at-google-recovered-dead-1786704470

NO COMMENTS

Exit mobile version