Home இலங்கை பொத்துவில் கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய மீனவர் கடற்படையால் மீட்பு

பொத்துவில் கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய மீனவர் கடற்படையால் மீட்பு

0
image

பொத்துவில் கடற்பரப்பில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கிய இலங்கை மீனவப் படகு ஒன்றில் இருந்த மீனவர் ஒருவரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். 

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்புப் பணி ஒருங்கிணைப்பு மையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, கடற்படைக்குச் சொந்தமான ‘விஜயபாகு’ கப்பல் மற்றும் ஏனைய விசேட படகுகளைப் பயன்படுத்தி நேற்று (17) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பொத்துவில் கடற்பரப்பிற்கு அப்பால் ஆபத்தில் சிக்கியிருந்த படகில் இருந்த மீனவர் கண்டுபிடிக்கப்பட்டார். 

பாதுகாப்பாக மீட்கப்பட்ட அந்த மீனவருக்கு ‘விஜயபாகு’ கப்பலில் முதலுதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ​வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Source: https://samugammedia.com/fisherman-in-distress-off-the-coast-of-pottuvil-rescued-by-the-navy-1784377387

NO COMMENTS

Exit mobile version