Home இலங்கை பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை; பெருந்தொகை மதுபானம் மீட்பு

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை; பெருந்தொகை மதுபானம் மீட்பு

0
image

பௌர்ணமி தினமான நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து பெருந்தொகையான மதுபானங்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பௌர்ணமி தினத்தில் மதுபான விற்பனை நடைபெறுவதாகப் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரைக் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 5,000 லீட்டர் மதுபானம் மற்றும் 2,500 லீட்டர் பீயர் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

கைப்பற்றப்பட்ட மதுபானங்களும், கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Source: https://samugammedia.com/illegal-liquor-sales-on-full-moon-day-large-quantity-of-liquor-seized-1790493484

NO COMMENTS

Exit mobile version