அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (04) நள்ளிரவு 12.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மகாவலி கங்கையை அண்மித்துள்ள உடுநுவர, உடபலாத, யடிநுவர, கங்கஇஹல கோரள, பஸ்பாகே கோரள மற்றும் கங்கவட கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளுக்கு இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, அப்பகுதிகளில் மகாவலி கங்கையை அண்டியுள்ள மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
Source: https://samugammedia.com/flood-danger-in-mahavali-ganga–24-hour-warning-1785730913
