Home இலங்கை அதிகாலையில் நேருக்கு நேர் மோதிய இரு பேருந்துகள் – 20 பேர் காயம்! கேகாலையில் பதற்றம்

அதிகாலையில் நேருக்கு நேர் மோதிய இரு பேருந்துகள் – 20 பேர் காயம்! கேகாலையில் பதற்றம்

0
image

கேகாலை – கரடுபன பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச.) பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (03) காலை 6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச. பேருந்தும், திகனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்துமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கேகாலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/two-buses-collided-head-on-early-in-the-morning—20-people-injured-tension-in-kegala-1785731033

NO COMMENTS

Exit mobile version