Home இலங்கை மக்களுக்கு தரமான, குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் – அரசு எடுத்த நடவடிக்கை

மக்களுக்கு தரமான, குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் – அரசு எடுத்த நடவடிக்கை

0
image

பொதுமக்களுக்கு தரமான நுகர்பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில், லங்கா சதொச நிறுவனம் ஊடாக 25 அத்தியாவசிய நுகர்பொருட்களை நேரடியாக இறக்குமதி செய்வதற்கு கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசேகர,

தற்போது சந்தையில் கிடைக்கப்பெறும் சில அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்து நுகர்வோர் மத்தியில் எழுந்துள்ள கவலைகளுக்குத் தீர்வுகாண்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

அத்துடன், வர்த்தக சந்தையில் இடைத்தரகர்கள் காரணமாக நுகர்பொருட்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவீனங்களைக் குறைத்து, அதன் மூலம் பொதுமக்களுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்படுவதைத் தடுப்பதற்கும் இந்த நேரடி இறக்குமதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/the-government-has-taken-steps-to-provide-essential-goods-of-good-quality-at-low-prices-to-the-people-1780558630

NO COMMENTS

Exit mobile version