Home ஏனையவை வாழ்க்கைமுறை நீரிழிவுக்கு மருந்து கண்டுபிடித்த சீனர்கள்

நீரிழிவுக்கு மருந்து கண்டுபிடித்த சீனர்கள்

0

Courtesy: Sivaa Mayuri

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை புதுமைமிக்க உயிரணு சிகிச்சை(Cell therapy )முறையின் மூலம் முழுமையாகக் குணப்படுத்தி சீனாவின் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சீன அறிவியல் கழகத்தை சேர்ந்த குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்த சிகிச்சை முறை, செல் டிஸ்கவரி (Cell Discovery) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் செய்தித் தகவலின்படி, 2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உயிரணு மாற்று அறுவை சிகிச்சை சீன நாட்டை சேர்ந்த ஒரு நோயாளிக்கு மேற்கொள்ளப்பட்டது.

பல கோடி மக்களைக் காப்பாற்றும்

குறிப்பிடத்தக்க வகையில், பதினோரு வாரங்களுக்குள் அவர் இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்திக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து ஒரு வருட காலத்தில், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தி, வாய்வழியாக மருந்துகளை உட்கொண்டு வந்தார்

இறுதியில் அதன் அளவையும் படிப்படியாகக் குறைத்து மொத்தமாக மருந்தை நிறுத்திக் கொண்டார் என்று அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் சீனாவின் புதிய உயிரணு சிகிச்சை முறை உண்மையில் பல கோடி மக்களைக் காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அதிவேக இணைய பாவனைக்கு காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

அமெரிக்காவில் முன்னணி நடிகர் நள்ளிரவில் சுட்டுக்கொலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version