Courtesy: Sivaa Mayuri
இலங்கைக்கு சிங்கப்பூரின்(Singapore) குடிவரவு சோதனைச் சாவடி ஆணையக அதிகாரிகளின் தூதுக்குழு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, சிங்கப்பூர் போன்ற தரநிலைகளை அடைவதன் மூலம் இலங்கையின் குடிவரவு முறையை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் உயிரிழப்பு
விசேட கலந்துரையாடல்
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரும் சிங்கப்பூர் சட்ட அமைச்சருமான கே சண்முகத்திடம் இலங்கையின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை இந்த விஜயத்துக்கு முன்னர், சிங்கப்பூருக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் செனரத் திசாநாயக்க, இலங்கைக்கு வருகைத்தரு குழுவை சந்தித்து கலந்துரையாடலை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடாவுக்கு பயணமாகவிருந்த இளைஞன் விபத்தில் பலி
ஈரான் ஜனாதிபதி மரணத்தில் வெளிவரா திகில் நிமிடங்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |