Home இலங்கை இந்தியாவை தொடர்ந்து இலங்கைக்குள் கலமிறங்கிய சீனத் தூதுக் குழு

இந்தியாவை தொடர்ந்து இலங்கைக்குள் கலமிறங்கிய சீனத் தூதுக் குழு

0

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழு இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் சீன கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான வாங் ஜுன்செங் ( Wang Junzheng ) தலைமையிலான குழுவே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

இந்த குழு இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை 09.45 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

 அனர்த்த நிவாரணப் பணி

இந்த குழு இலங்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் அனர்த்த நிவாரணப் பணிகளை பார்வையிடவுள்ளதுடன் இலங்கை அரசாங்கத்தின் உயர்அதிகாரிகளை சந்தித்து அனர்த்த்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையிலுள்ள சீனத் தூதுவர் ஷி ஷென் ஹொங் (Qi Zhenhong) மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க உள்ளிட்ட பலர்கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழுவை வரவேற்றியுள்ளனர்.

 

NO COMMENTS

Exit mobile version