Home இலங்கை மத நிகழ்வில் பங்கேற்க சென்றவர்களுக்கு துயரம் – ரயில் மோதி தாயும் மகளும் பலி

மத நிகழ்வில் பங்கேற்க சென்றவர்களுக்கு துயரம் – ரயில் மோதி தாயும் மகளும் பலி

0
image

களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் தாயும் அவரது உறவுக்கார மகளும் உயிரிழந்துள்ளனர்.

அதிகாலை சுமார் 4.30 மணியளவில், அனுராதபுரம் நோக்கி பயணிப்பதற்காக களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தின் வலது பக்கமாக நடைமேடையை நோக்கி ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோதே இவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.

மருதானையிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் இவர்கள் மோதியதாக களுத்துறை ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதில் தாயும் அவரது உறவுக்கார மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இவர்களுடன் உயிரிழந்த தாயின் மகளும் பயணித்ததாகவும், மூவரும் மதுகம பகுதியில் இருந்து அனுராதபுரம் புனித நகரில் நடைபெறவிருந்த மத நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பாதை வழியாக நடைமேடையை நோக்கி மிகவும் கவனக்குறைவாகச் சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த பெண்களின் சடலங்கள் தற்போது தெற்கு களுத்துறை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், 

அவற்றை களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/tragedy-for-those-who-went-to-attend-the-religious-event—mother-and-daughter-killed-in-a-train-accident-1789524666

NO COMMENTS

Exit mobile version