Home இலங்கை மலையகத்தை மூடிய கடும் பனிமூட்டம்!

மலையகத்தை மூடிய கடும் பனிமூட்டம்!

0
image

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டத்துடன், மிதமான மழையும் பெய்து வருகிறது.

இதனால் மலையகப் பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடும் பனிமூட்டம் காரணமாக ஹட்டன் – நுவரெலியா, ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – கண்டி பிரதான வீதிகளில் வாகனங்களை செலுத்துவது சிரமமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு ஹட்டன் வலய பொலிஸ் தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக பேருந்துகள், பாரவூர்திகள், கார்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் சாரதிகள், பனிமூட்டம் மற்றும் மழை காரணமாக மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், மிதமான மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால், குறித்த வீதிகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் மிகவும் அவதானமாக செல்லுமாறு நுவரெலியா மாவட்ட போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Source: https://samugammedia.com/heavy-fog-covers-the-mountains-1787210342

NO COMMENTS

Exit mobile version