Home இலங்கை மழையால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கோரிக்கை

மழையால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கோரிக்கை

0
image

கடந்த மாதம் பெய்த தொடர்மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களை சேர்ந்த 40க்கும் அதிகமான பேர் லக்கம்  சிங்கள வித்தியாலயத்தின் மண்டபத்தில் தங்கி வருகின்றனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட மக்களை பல பாராளுமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்ட போதும் அவர்களின் தேவைப்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்கள் நிவர்த்தி செய்து வைத்ததுடன் நிலைமை தொடர்பாக மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிளுடன் கலந்துரையாடினார்.

அதன் அடிப்படையில் மக்கள் குறித்த பகுதியில் வாழ முடியாது என்பதுடன் குறித்த 10 குடும்பங்களுக்கும் தனித்தனி வீடுகளை அமைக்க காணியை மட்டுமாவது இப்போதைக்கு பிரித்து தருமாறு கேட்டுக் கொண்டார் என்பதோடு இரண்டு கட்டங்களாக அவர்களுக்கான நிவாரண பொருட்களும் மஸ்கெலியா பிரதேச அரசியல் செயற்பாட்டாளர் ரொமேஸ் தர்மசீலன் தலைமையில் வழங்கி வைத்தார்.

அரசாங்கத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த மக்களை பார்வையிட்ட போதும் அவர்களின் நிலையை மாற்றவோ அல்லது புதிய வீடுகளை அமைக்கவோ அல்லது குறித்த வீடுகளுக்கு மேல் சரிந்துள்ள மண் மேட்டினை அகற்றுவது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாளைய தினம் மூன்றாம் தவனைக்காக பாடசாலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் பாடசாலை மண்டபத்தை கையளிக்க வேண்டியுள்ளது ஆகவே பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் மீள் திருத்தம் செய்யாத நிலையில் குறித்த குடியிருப்புகளில் தங்குவதற்கு மக்கள் அச்சம் அடைகின்றனர்.

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் மவுசாகலை தோட்டம், மஸ்கெலியா பிரதேச சபை, நோர்வுட் பிரதேச செயலகம், அனர்த்த முகாமைத்துவ அமைப்பு, நுவரெலியா மாவட்ட அரசாங்கம் சார்ந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது உங்கள் அனைவரினதும் கவணத்திற்காக.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு சரியான நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே அந்த மக்களின் எதிர்பார்ப்பு ஆகவே தோட்ட நிர்வாகம் குறித்த மக்களுக்கு வீடுகளை அமைக்க இட ஒதுக்கீடு தர வேண்டும், அரசாங்கம் அவர்களுக்கு வீடுகளை அமைத்து தர வேண்டும் இதனை விரைவாக செயற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றனர்.

Source: https://samugammedia.com/demand-for-permanent-houses-for-10-rain-affected-families-1788765651

NO COMMENTS

Exit mobile version