Home இலங்கை மஸ்கெலியா பிரவுன்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் 30ஆம் திகதி

மஸ்கெலியா பிரவுன்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் 30ஆம் திகதி

0
image

மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பிரவுன்லோ ( கிராம்பு தோட்டத்தில்) அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தண நவகுண்டபக்க்ஷ அஷ்ட பந்தனப் பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 30. 08.2026.அன்று நடைபெறவுள்ளது. 

இயற்கை எழில் கொண்ட இலங்கை தீவின் சர்வ மத மக்களும் சமத்துவமான வளமும் இயற்கை மனங் கமழ் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் சிவனடி பாத மலை அடிவாரத்தில் அரை நூற்றாண்டுக்கு மேல் தொண்மை கொண்ட மஸ்கெலியா புரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு நிகழும் சுப மங்களகரமான பராபவ வருடம் ஆவணி மாதம் 13ஆம் நாள் (30.08.2026) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணி 9 நிமிடம் முதல் 11 மணி 14 நிமிடம் வரை உள்ள கிருஷ்ணா பக்ஷ திருதியை திதியும் உத்திரட்டாதி நட்சத்திரமும் துலா லக்கினமும் அமிர்த யோகம் கூடிய சுபமுகூர்த்த சுப வேளையில் எல்லாம் வல்ல ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கும் அவ்வாளையத்தில் அமைந்துள்ள பரிவார மூர்த்திகளுக்கும் புணரா வர்த்தன நவகுண்டபக்க்ஷ அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருஞ்சாந்தி விழா நடைபெற திருவருள் பாலித்துள்ளதால் அன்றைய தினம் மெய்யடியார்கள் அனைவரும் இக் கிரியா காலங்களிலும் குடமுழுக்கு பெருஞ்சாந்தி விழாவில் கலந்து கொண்ட கிராம்பு தோட்ட கிராமத்தில் கடந்த 58 ஆண்டுகள் அங்கு குடிகொண்டுள்ள அம்பிகையின் அருளை பெற்றுய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்.

ஆவணி பத்தாம் நாள் 27. 8 .2026 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாடு திரவியசுத்தி, திரவிய விபாகம், கணபதி ஹோமம், தனஹர்ஷனு ஹோமம் ,லக்ஷ்மி ஓமம், என்பன இடம்பெற்று அடியார்களுக்கு பிப்ரவரி பிரசாதம் வழங்கப்படும்.

ஆவணி பதினோராம் நாள் 28. 8 .2026 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு சுத்தி புண்ணியாக வாசனம்,கிராம சாந்தி, பிரவேச பலி ,திசா ஹோமம், சாந்தி ஹோமம் ,சங்கீதா ஹோமம், மூர்த்தி ஹோமம்,  ரஷோக்ன ஹோமம், வாஸ்து சாந்தி என்பன இடம்பெற்று அடியார்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்படும்.

ஆவணி 12 ஆம் நாள் 29. 8 .2026 சனிக்கிழமை காலை 7 மணிக்கு சுதி புண்ணியா வசனம் சக்தியனுஸ்டானம் மங்கலத்துவஜ பூஜை எண்ணெய் காப்பு சாத்துதல் யாகசாலை பிரவேசம் மாலை 5 மணிக்கு எண்ணெய் காப்பு நிறைவு தொடர்ந்து கிரிகைகள் இடம்பெற்ற நிலையில் அடியார்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்படும்.

ஆவணி 13 ஆம் நாள் முப்பது எட்டு ரெண்டாயிரத்தி இருவத்தி ஆறு ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணிக்கு புண்ணியாக வாசனம் ஆசாரிய விசேட சந்தி மங்கள துவஜ பூஜை செய்த ஹோமம் தாரா ஹோமம் மஹா பூர்நாகுதி தர்பணா குதி தீபனாகுதி அலங்கார தீபாரதனை அந்தர் பலி பகிர் பலி ஸ்தோத்திர பராயணம் ஆசீர் வசனம் யாத்ரா தானம் முற்பகல் பத்து மணி 9 நிமிடம் முதல் 11 மணி 14 நிமிடம் வரை உள்ள சுபமுகூர்த்த சுப வேளயில் வேதா கோஷ நிர்த்தகீத மங்கள பேரிவாத்தியம் முழங்க அடியார்களின் அரோகரா கோசத்துடன் பிரதான ஸ்தூல லிங்க ஸ்டுபி கும்பங்கள் வீதி பிரதாப்ஷணம் தொடர்ந்து ரூபி அபிஷேகம் மூலாயப் பிரவேசம் விசேட நியாசங்கள் காலஹர்ஷணம் சம் யோசனம் மகா கும்பாபிஷேகம் தீபராதனைகள் கோ பூஜை திருக்கதவு திறத்தல் தச தர்சனம் ஆசாரிய சம்பாசனை ஆசிய உரை ,கௌரவிப்பு மகாபிஷேகம் தீபாராதனை மகேஸ்வர பூஜை அன்னதானம் என்பது இடம்பெறும். 

சகல பூஜைகளும் ஆலய பிரதம குரு ச.கனகராஜ் குருக்கள் தலைமையில் பிரதம குரு சிவ ஸ்ரீ கிருஷ்ணன் குமார் குருக்கள் பாசுபதேசுவர் தேவஸ்தானம் பனங்காடு அக்கரைப்பற்று.அவர்களி தலைமையில் இடம பெற உள்ளது.

Source: https://samugammedia.com/maskeliya-brownlow-sri-muthumariamman-temple-maha-kumbabishekam-on-the-30th-1787564566

NO COMMENTS

Exit mobile version