நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், காலி – மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்கு கட்டளையிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த கட்டளை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், “மஹமோதர” என்ற பெயரில் இந்த சிறைச்சாலை நிறுவப்படவுள்ளதுடன், இதன் அதிகாரப் பிரதேசம் முழு இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூடப்பட்ட மஹமோதர வைத்தியசாலையின் ஒரு பகுதியில் தற்காலிக அடிப்படையில் இந்த சிறைச்சாலையை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
