Home இலங்கை முதலை உண்ட நிலையில் இளைஞரின் சடலம் கண்டெடுப்பு; பல மணிநேரம் மீட்க போராடிய அதிகாரிகள்

முதலை உண்ட நிலையில் இளைஞரின் சடலம் கண்டெடுப்பு; பல மணிநேரம் மீட்க போராடிய அதிகாரிகள்

0
image

கொழும்பு – பிலியந்தலை, கரடியானா குப்பை அகற்றும் நிலையத்திற்கு எதிரில் உள்ள வேரஸ் கங்கையில், முதலைகளால் உண்ணப்பட்ட நிலையில் இளம் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாயுரபுர பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஷெஹான் தாரகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கரடியானா குப்பை அகற்றும் நிலையத்தின் ஊழியர்கள், ஆற்றில் மனித சடலம் ஒன்று கிடப்பதையும், அதனை முதலை ஒன்று இழுத்துச் செல்வதையும் அவதானித்துள்ளனர். இதையடுத்து சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள், சடலத்தை முதலை ஒன்று உண்டு கொண்டிருந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன்பின்னர், அப்பகுதி மக்களின் உதவியுடன் சடலத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், முதலை சடலத்தைப் பிடித்திருந்ததால் மீட்புப் பணிகள் தடைப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சடலத்தை பாதுகாப்பாக மீட்பதற்காக வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/youths-body-found-in-a-state-of-being-eaten-by-a-crocodile-officers-struggled-for-several-hours-to-recover-it-1788332378

NO COMMENTS

Exit mobile version