Home இலங்கை வேல் தாங்கி நல்லூர் நோக்கி புறப்பட்ட பக்தர்கள் – வவுனியாவிலிருந்து பாதயாத்திரை

வேல் தாங்கி நல்லூர் நோக்கி புறப்பட்ட பக்தர்கள் – வவுனியாவிலிருந்து பாதயாத்திரை

0
image

வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை நோக்கிய வேல் தாங்கிய பாதயாத்திரை இன்று (02) ஆரம்பமானது.

வேப்பங்குளம் ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, முருகப்பெருமானின் திருவுருவம் தாங்கிய ஊர்தியுடன் பக்தர்கள் வேல் தாங்கி நடைபவனியை ஆரம்பித்தனர்.

இப்பாதயாத்திரை தொடர்ந்து எட்டு நாட்கள் ஏ9 வீதி ஊடாக இடம்பெறவுள்ளதுடன், 

வழியில் உள்ள ஆலயங்களில் தரிசனம் செய்து, ஒன்பதாம் நாள் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா தினத்தன்று நல்லூரை சென்றடையவுள்ளது.

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுக்கும் இந்த ஆன்மிகப் பாதயாத்திரை, பல்வேறு ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொண்டவாறு நல்லூர் நோக்கி தொடரவுள்ளது.

Source: https://samugammedia.com/devotees-setting-out-towards-nallur-carrying-the-spear—pilgrimage-from-vavuniya-1788339122

NO COMMENTS

Exit mobile version