Home இலங்கை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு மீண்டும் திறப்பு; மக்களுக்கு அவதான எச்சரிக்கை

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு மீண்டும் திறப்பு; மக்களுக்கு அவதான எச்சரிக்கை

0
image

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று (04) அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கப் பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (03) திறக்கப்பட்ட வான் கதவுகளின் தொடர்ச்சியாக, இன்று அதிகாலையிலும் நீர்மட்டம் மேலும் உயர்ந்ததையடுத்து, ஒரு வான் கதவு திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடர்ந்தால், ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கப்படக்கூடிய நிலை உருவாகலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதனால், அணைக்கட்டிற்கு கீழ்ப்பகுதியில் பாயும் கொத்மலை ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஆற்றங்கரைக்கு தேவையின்றி செல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அப்பகுதியில் நிலவி வரும் தொடர்ச்சியான மழையால் செயின்ட் கிளேயர் மற்றும் டெவோன் அருவிகளில் நீர்வரத்து வழக்கத்தை விட கணிசமாக அதிகரித்துள்ளதுடன், அவை பேரிரைச்சலுடன் கொட்டிவருகின்றன. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவிகளுக்கு அருகில் செல்லும்போது கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Source: https://samugammedia.com/the-sky-gate-of-the-ma-malai-reservoir-will-reopen-a-cautionary-warning-for-the-people-1785828623

NO COMMENTS

Exit mobile version