Home இலங்கை யாழில் எரித்தழிக்கப்பட்ட கஞ்சா! நீதிமன்ற உத்தரவில் அதிரடி

யாழில் எரித்தழிக்கப்பட்ட கஞ்சா! நீதிமன்ற உத்தரவில் அதிரடி

0
image

யாழ்ப்பாணம் –  ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் – மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் இன்று (24) சுமார் 600 கிலோகிராம் எடையுடைய கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கடத்தப்பட்ட கேரளக் கஞ்சா பொதிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன. 

அவை தொடர்பான வழக்குகள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வழக்குகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து குறித்த கஞ்சா பொதிகளை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த எரித்தழிப்பு நடவடிக்கை நீதிவான், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார், ஊர்காவற்துறை பொலிஸார், கொழும்பிலிருந்து வருகை தந்த அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோரின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த அழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source: https://samugammedia.com/ganja-burnt-and-destroyed-in-jaffna-shock-action-by-court-order-1784889265

NO COMMENTS

Exit mobile version