யாழ்ப்பாண மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், இன்று யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் உப குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
இந்தக் கலந்துரையாடலின் போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீதி அபிவிருத்தித் திட்டங்கள், உள்ளூராட்சி சபைகளின் ஊடாக முன்னெடுக்கப்படும் வீதி புனரமைப்புப் பணிகள், டித்வா புயலால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் வீதிகளை விரைவாக சீரமைக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
குறிப்பாக, தீவகப் பகுதிகளுக்கான போக்குவரத்து சேவையை மேலும் வலுப்படுத்துவது, பொதுமக்களின் அன்றாடப் பயணத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சீரான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
மக்களின் அன்றாட வாழ்வை எளிதாக்கும் பாதுகாப்பான, தரமான மற்றும் நிலையான போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டு வருகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தின் போக்குவரத்து உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
