Home இலங்கை யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையிடம் கையளிப்பு!

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையிடம் கையளிப்பு!

0
image

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்டுள் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபை ஆவணத்தில் இன்று(18) கையொப்பமிட்டனர்.

நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையில் அங்கம் வகிக்கும் 9 உறுப்பினர்களும் கலந்துகொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அமைச்சரவையின் அனுமதியுடன் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையிடம் கையளிக்கப்படுகின்றது.

மாகாண சபை ஆட்சி இல்லாத காரணத்தால், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாநகர சபை ஆணையாளர் ஏ.சி. அரவிந்தராஜ், கலாசார அமைச்சின் செயலாளர் வர்ணகுல சூரிய பிறின்ஸ் சேனாதீர, யாழ் மாநகர முதல்வர் வி. மதிவதனி, இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் சாய் முரளி, மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்.ஆகியோர் கலந்து கொண்டு கைச்சாத்திட்டனர்.

மேலும், சட்டவிரிவுரையாளர் கோசலை மதன், யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சிறீசற்குணராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Source: https://samugammedia.com/yaal-thiruvalluvar-cultural-center-handed-over-to-the-trust-fund-accountability-board-1789721336

NO COMMENTS

Exit mobile version