Home இலங்கை ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி; கவனக்குறைவால் சாரதி ஸ்தலத்தில் உயிரிழப்பு

ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி; கவனக்குறைவால் சாரதி ஸ்தலத்தில் உயிரிழப்பு

0
image

களுத்துறை, அளுத்கம – டிப்போ வீதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கிப் பயணித்த அலுவலக அதிவேக ரயிலுடன், முச்சக்கரவண்டி மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், முச்சக்கரவண்டி தர்கா நகரிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்துள்ளதோடு, 

ரயில் கடவையைச் சாரதி கவனக்குறைவாக கடக்க முயன்றபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து நிகழ்ந்த போது முச்சக்கரவண்டியில் சாரதி மட்டுமே பயணித்துள்ளார்.உயிரிழந்த நபர் யார் என்பது குறித்த விவரங்கள் அடையாளம் காணப்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Source: https://samugammedia.com/tractor-collided-with-train-driver-dies-on-the-spot-due-to-negligence-1781155729

NO COMMENTS

Exit mobile version