Home இலங்கை ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது – சேவைகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை

ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது – சேவைகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை

0
image

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளரை பதவி நீக்கம் செய்வது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கின்றது.

இந்த பணிப்புறக்கணிப்பு இன்று நள்ளிரவு 12 மணி வரை அமுலில் இருக்கும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தாலும், இன்று வழமை போன்று ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, பணிப்புறக்கணிப்புக்கு மத்தியிலும் பயணிகளுக்கான ரயில் சேவைகளை இயன்றளவு வழமைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/the-railway-unions-strike-continues—action-to-bring-services-back-to-normal-1789706703

NO COMMENTS

Exit mobile version