Home இலங்கை லக்க்ஷபான தேயிலை தொழிற்சாலை மீண்டும் கட்டியெழுப்ப தோட்ட நிர்வாகம் அடிக்கல் நாட்டு!

லக்க்ஷபான தேயிலை தொழிற்சாலை மீண்டும் கட்டியெழுப்ப தோட்ட நிர்வாகம் அடிக்கல் நாட்டு!

0
image

ஆர் பி கே தோட்ட கம்பெனிக்கு உரித்தான மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள லக்க்ஷபான தோட்ட வாழமலை பிரிவில் அமைந்துள்ள நவீன முறையில் 1969 ம் ஆண்டு கால பகுதியில் அமைக்கப்பட்ட தேயிலை தொழிற்சாலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பகுதியளவில் பாரிய தீ பரவலுக்கு உள்ளானது.

இதன் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் தேயிலை தொழிற்சாலை எரிந்து சாம்பலானது.

குறித்த தேயிலை தொழிற்சாலை மீண்டும் கட்டியெழுப்ப தோட்ட நிர்வாகம் முன் வந்து உள்ளது.

தீ பரவல் காரணமாக தோட்ட நிர்வாகத்திற்கு காப்புறுதி நிறுவனம் வழங்கிய காப்புறுதி பணத்துடன் தோட்ட நிர்வாகம் இணைந்து தேயிலை தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்ப முன் வந்து நேற்று 14 ம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிகழ்வில் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் தோட்டத்தில் பணியாற்றி வரும் உத்தியோகத்தர்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

சமய பெரியவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கிரியைகளை மேற் கொண்டனர்.

Source: https://samugammedia.com/the-plantation-management-has-laid-the-foundation-stone-for-the-reconstruction-of-the-lakshadweep-tea-factory-1781508001

NO COMMENTS

Exit mobile version