அம்பாறை மாவட்டம், பொத்துவில் அருகம்பே P5 சாவாலை வீதியில் நேற்று நள்ளிரவு 10.30 மணியளவில் திடீரெனப் புகுந்த காட்டு யானையால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.மக்கள் நடமாட்டம் உள்ள வீதிக்குள் யானையைக் கண்டதும் கிராமமே அச்சத்தில் உறைந்தது.
ஆத்திரத்துடன் மக்களை நோக்கி யானை பாய்ந்து வர, பொதுமக்கள் நாலாப்பக்கமும் சிதறியோடினர்
அச்ச சூழ்நிலையிலும் பதறாத அப்பகுதி இளைஞர்கள், துணிச்சலுடன் களத்தில் இறங்கினர்.
யானைக்குச் சிறிய காயம் கூட ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து, மிகச் சாதுரியமாகச் யானையைப் பாதுகாப்பாகக் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
இளைஞர்களின் இந்த அதிரடி முயற்சியால் பெரிய உயிர்ச்சேதமும், உடைமைச் சேதமும் தவிர்க்கப்பட்டது
அருகம்பே பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு வனஜீவராசிகள் திணைக்களம் உடனடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source: https://samugammedia.com/wild-elephant-intrusion-at-midnight-stir-in-arugambey-1785935964
